எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கில் தனித்துப் போட்டியிட முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
அக் கட்சியின் செயலாளர் நிஷாம் காரியப்பர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஏனைய மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட முன்னதாகவே முடிவு செய்யப்பட்டுள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும், விரைவில் நடைபெறவுள்ள கூட்டத்தில் இது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என நிஷாம் காரியப்பர் சுட்டிக்காட்டியுள்ளார்.