காலி கிந்தொட்ட பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இனக்கலவரம் தொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரரினால் அறிக்கைகள் எதுவும் வெளியிடப்படாத நிலையில் அவரின் பெயரில் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தளங்களூடாக அவருடைய பெயரைப் பயன்படுத்தி ஊடக பிரசாரங்கள் வெளியிடப்படுவதாகவும் பொது பல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் நன்கு ஆராய்ந்து இக் கலவரத்தில் சொத்துக்களை இழந்தவர்களுக்கும் விஷேடமாக காயமடைந்தவர்களுக்கும் உரிய நஷ்டஈட்டினை ப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதோடு சமூகத்தில் ஒற்றுமையை ஏற்படுத்த அனைவரும் உடன்பட வேண்டும் என சம்பவ இடத்துக்கு விஜயம் செய்த ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் கலவரம் இடம்பெற்றுக் கொண்டிருந்த இடத்துக்கு பொலிஸார் சென்றிருந்த போதிலும் அரசியல் தலையீடுகள் காரணமாக அதனை முறையாக கட்டுப்படுத்த பொலிஸாரினால் முடியாது போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இப்பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்களின் இனவாதத்தை தூண்டும் செயற்பாடாக நாம் இதனைக் கருதுகின்றோம்.
கின்தொட்ட பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் சிங்கள இனத்தவருக்கும் முஸ்லிம் இனத்தவருக்கும் இடம்பெற்ற பிரச்சினையே இவ்வாறு இனக்கலவரமாக தோற்றம் பெற்றுள்ளது இப்பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நாம் கேட்டுக் கொள்கின்றோம். நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக இது தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் பிரதேசங்கள் தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.
அண்மையில் கம்பொல பிரதேசத்தில் இடம் பெற்ற பெரஹரா நிகழ்வில் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்கள் முஸ்லிம் பள்ளிவாசலின் அருகில் வைத்து கல் எறிந்து தாக்குதல் நடத்தினர். அதன் போதும் இவ்வாறானதொரு இனப்பிரச்சினை ஏற்பட்டது. இச்சம்பவம் முஸ்லிம் அராஜக வாதிகளின் உள்நாட்டில் மட்டுமல்லாது சர்வதேச ரீதியிலம் இடம் பெறும் முஸ்லிம் சிங்கள இனக்கலவரத்தின் தாக்கம் விரைவில் எமது நாட்டிலும் அபாயகரமான ஒரு தாக்கத்தை தோற்றுவிக்கும்.
இவ்வாறான ஆபத்தை தடுப்பதற்காகவும் எதிர்வரும் வருடங்களில் நாட்டை அபிவிருத்தி அடையச் செய்வதற்காகவும் தமிழ், இஸ்லாம் மற்றும் பௌத்த இன மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம்