வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னிடம் இருந்தே நாம் யுத்­தத்தை கற்­றுக்­கொண்டோம்!

393 0

வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னிடம் இருந்தே நாம் யுத்­தத்தை கற்­றுக்­கொண்டோம். பிர­பா­கரன் ஒருவர் உரு­வா­கி­யதன் கார­ண­மா­கவே பீல்ட் மார்ஷல் ஒருவர் உரு­வா­கினார். பிர­பா­கரன் யுத்­த­க­ளத்தில் பல­மாகும் போது நாமும் பல­மா­கினோம். பிர­பா­கரன் யுத்தம் ஆரம்­பிக்கும் போது இரா­ணு­வத்தில் 10 ஆயிரம் பேரே இருந்­தனர். தற்­போ­துள்ள பல­மான இரா­ணுவம் அப்­போது இருந்­தி­ருந்தால் எம்மால் இரு வரு­டங்­களில் யுத்­தத்தை முடித்­தி­ருக்க முடிந்­தி­ருக்கும். எனவே, யுத்தம் இருந்­தாலும் இல்­லா­விட்­டாலும் இரா­ணுவம் பல­மாக இருக்க வேண்டும் என பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா சபையில் தெரி­வித்தார்அத்­துடன், இரா­ணுவ வீரர்கள் என்ற வகையில் எமக்கு அமெ­ரிக்கா போன்ற நாடு­க­ளுக்கு செல்ல முடி­யாமல் உள்­ளது.

எனினும் அமெ­ரிக்க இரா­ணுவ தள­பதி இங்கு நடக்கும் மாநா­டொன்­றுக்கு பிர­தம அதி­தி­யாக வரு­கின்றார். இதனை இப்­ப­டியே விட்டு சும்மா இருக்க முடி­யாது. இந்த நெருக்­க­டி­யி­லி­ருந்து நாம் மீள வேண்டும். அதனை விடுத்து முட்­டாள்த்­த­ன­மாக பேசிக் கொண்­டி­ருப்­பதில் பய­னில்லை என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று சனிக்­கி­ழமை 2018 ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­டத்தில் பாது­காப்பு, சட்டம் ஒழுங்கு, நீதி அமைச்­சுக்­க­ளுக்­கான ஒதுக்­கீ­டுகள் மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

நாட்டின் பாது­காப்­பிற்­காக படை­யினர் பலர் உயிரை தியாகம் செய்­தனர். அதனால் பலதை நாம் இழந்தோம். எனினும் இதனால் நாம் கவலை கொள்ள மாட்டோம். பாது­காப்பு படை­யி­னரால்  நாட்­டுக்கு கடன் இல்லை என்று சந்­தோ­ஷப்­பட முடியும். ஏனெனில், நாட்­டுக்கு செலுத்த வேண்­டிய கடனை அவர்கள்  தனது உழைப்பின் மூலம் வழங்கி விட்­டனர். பாது­காப்பு படை­யி­ன­ருக்­குள்ள பிர­தான பொறுப்பு அர­சி­ய­ல­மைப்­பினை பாது­காப்­ப­தாகும். அவர்கள் அதற்கு முன்­னின்று செயற்­ப­டுவர்.

முப்­பது வரு­டங்­க­ளாக யுத்தம் இருந்­தது. அப்­போது நாட்டில் பாது­காப்பு இருந்­த­தாக நான் நினைக்­க­வில்லை. எனினும் யுத்­தத்தை வெல்ல பாரிய சேவை­களை முன்­னெ­டுத்தோம். பாது­காப்பு படை­களில் 99.5 வீதம் தேசப்­பற்­றுள்­ள­வர்கள் இருந்­தனர். 5 வீதத்­தினர் நாட்டைப் பற்றி சிந்­திக்­காமல் சில குழுக்­களின் பின்னால் பணத்­திற்­காக செயற்­பட்­டனர். இந்த யுத்­தத்­தினால் 30 ஆயிரம் பாது­காப்பு படை­யினர் உயி­ரி­ழந்­தனர். அதில் 28 ஆயிரம் பேர் தரைப்­ப­டை­யி­ன­ராவர். 3000 பேர் ஊன­முற்­றனர். எனவே, இந்த ஒட்­டு­மொத்த படை­யி­னரின் உத­விகள் இன்றி எம்மால் வெற்­றி­ய­டைந்­தி­ருக்க முடி­யாது. யுத்­தத்தின் போது பாது­காப்பு படையில் 3 இலட்சம் படை­யினர் இருந்­தனர். அதில் 2 இலட்சம் பேருக்கு  நானே தலைமை வகித்தேன். இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் 67 வருடம் பழை­மை­யான  இரா­ணுவம் உள்­ளது. எனினும், இரா­ணு­வத்­திற்கு சர்­வ­தேச தரம்­வாய்ந்த பாது­காப்பு செயற்­முறை திட்டம் இல்லை. பாது­காப்பு திட்­ட­மில்லை. இரா­ணுவ வீரர்­க­ளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். எதிர்­கா­லத்தில் நாட்­டுக்குள் பிரச்­சி­னைகள் வரலாம். ஆகவே, தற்­போது படை­யி­ன­ருக்கு உரிய இடம் வழங்க வேண்டும்.

கடந்த காலங்­களை விடவும் பாது­காப்­புக்கு ஒதுக்­கீடு இரட்­டிப்­பாக்­கப்­பட்­டுள்­ளது. எனினும், முன்­னைய ஆட்­சியின் பாது­காப்­புக்கு நிதி ஒதுக்­கு­வ­தனை விடுத்து அதற்கு பதி­லாக கொள்­ளை­யிட்­டனர்.

இரா­ணுவத் தள­பதி பத­விக்கு  முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­வர்கள் அவ­சி­ய­மாகும். ஒரு முறை இருந்தால் போதும் என்­ப­வர்­களை நிய­மிக்கக் கூடாது. பாது­காப்பு செய­லா­ள­ராக சிவில் நபர் இருக்க வேண்டும். அத்­துடன், பாது­காப்பு பல்­க­லை­க­ழ­க­மொன்றை உரு­வாக்க வேண்டும். அதற்­கான நிதி ஒதுக்­கீடு செய்ய வேண்டும். கடற்­ப­டையின் பலத்தை எவன்கார்ட் நிறு­வ­னத்­திற்கு வழங்­கினர். ரத்­னா­லங்க போன்ற நிறு­வ­னத்­தினால் அப்­போ­தைய பாது­காப்பு செய­லாளர் வியா­பாரம் செய்து ஊழல் செய்தார். இது போன்ற அனைத்து குற்­றங்­க­ளுக்கும்  தண்­டனை வழங்க வேண்டும். குடும்ப அர­சியல் செய்­த­வர்­க­ளுக்கு தண்­டனை வழங்க வேண்டும்.

அதேபோன்று தற்போது வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றப் போவதாக கூறுகின்றனர்.  வடக்கு, கிழக்கு, தெற்கிலும் இராணுவம் இருக்க வேண்டியது அவசியமாகும். எங்கு இராணுவம் இருக்க வேண்டும் என்பதனை இராணுவமே தீர்மானிக்கும். எக்காரணம் கொண்டும் இராணுவத்தை பலவீனப்படுத்த நாம் முனையவில்லை. நாடுபூராகவும் இராணுவ முகாம்கள் இருக்கும்.

Leave a comment