தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் வட்டுக்கோட்டைத் தொகுதி அலுவலக திறப்புவிழா இன்று சங்கரத்தை வீதி, வட்டுக்கோட்டையில் இடம்பெற்றது.
வட்டு மண்ணின் மைந்தன் பிரபல இளம் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் அவர்களது தலைமையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது. சனிக்கிழமை (18-11-2017) பிற்பகல் 3.30 மணியளவில் மேற்படி நிகழ்வு ஆரம்பமானது. அலுவலகத்தின் பெயர் பலகையினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் அலுவலக பெயர்ப்பலகையினை திரைநீக்கம் செய்து வைத்தார்.
தொடர்ந்து மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, சிறப்பு உரைகள் இடம்பெற்றது. தலைமை உரையினை சட்டத்தரணி சுகாஸ் அவர்கள் நிகழத்தினார்.
தொடர்ந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் இ.எ.ஆனந்தராஜா, சட்டத்தரணி அர்ச்சுனா, சட்டத்தரணி றோய், மண்டைதீவு மகா வித்தியாலய அதிபர் திரு. சிவகுரு இளங்கோ, கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், வடலியடைப்பு பொது அமைப்புக்கள் சார்பாக திரு தனராஜ், உட்பட பலர் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.