யாழ். பொலிசாரின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி ருவான் குணசேகர தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் சமூக விரோத செயற்பாடுகளால் ஆவா என்று அழைக்கப்படும் குழுவைச்சேர்ந்த 6 பேர் நேற்று கைதுசெய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் ,மானிப்பாய் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவைச்சேர்ந்த பொலிசார் ஒன்றிணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
சமீபத்தில் இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பகுதியில் 39 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுள் 25 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று கைது செய்யப்பட்ட 6 பேரில் பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவரும் இருப்பதாக சமீபத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் தொடர்பில் 6 பேரை கைதுசெய்வதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் காரணமாக யாழ். பொலிஸ் பிரிவில் 6 பொலிஸ் நிலையங்களை சேர்ந்த பொலிசாரின் விடுமுறை , வட பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்னாண்டோவின் உத்தரவிற்கு அமைவாக இரத்துச்செய்யப்பட்டிருப்பதாக ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.