புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான இறுதிநாள் விவாதம் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வழிநடத்தல் குழுவின் 74ஆவது அமர்வு நேற்று வியாழக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றபோதே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய உறுப்பினர்களின் உரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்படவுள்ளதோடு இணக்கப்பாடு எட்டிய விடயங்கள், இணக்கப்பாடு எட்டாத விடயங்கள் உள்ளிட்டவை தொடர்பாக இரு தொகுப்புக்களும் தயாரிக்கப்படவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
முன்னதாக ஒக்டோபர் 30,31 மற்றும் நவம்பர் முதலாம் திகதி ஆகிய நாட்களில் மட்டுமே இடைக்கால அறிக்கை மீதான விவாதம் நடத்தப்படுவதாக கூறப்பட்டிருந்த போதும் விவாதத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களுக்கான நேர ஒதுக்கீடு போதுமானதாக இல்லாமையினால் கடந்த 2ஆம் திகதியும் விவாதம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.