தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பிரெஞ்சு பத்திரிகையாளர்கள் மீட்பு

268 0

தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இரண்டு பிரெஞ்சு பத்திரிகையாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக அரேபியா தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சனா உள்பட பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்கள் வைத்து அந்த பகுதிகளை சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர்.

சர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. அவர்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, ஏமனில் செய்தி சேகரிக்க சென்ற இரண்டு பிரெஞ்சு பத்திரிகையாளர்களை கடந்த 2-ம் தேதி ஹவுத்தி தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.  அவர்களை மீட்கும் பணியில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டு படையினர் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இரு பிரெஞ்சு பத்திரிகையாளர்களும் பத்திரமாக உயிருடன்  மீட்கப்பட்டுள்ளனர். விமானம் மூலம் அவர்கள் சவுதி அரேபியா தலைநகர் ரியாத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என அரேபியா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a comment