கூட்ட மைப்பின் கோரிக்கைகளில் 5 சதவீதம் கூட நிறைவேற்றப்படவில்லை!-வியாழேந்திரன்

300 0

கடந்த வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிக்க முன்னர் பிரதமர் ரணிலுடன் நாம் பேச்சு நடத்தினோம். அதில் முன்வைத்த கோரிக்கைகளில் 5 சதவீதம் கூட நிறைவேற்றப்படவில்லை.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வரவு   செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  அவர் மேலும் தெரிவித்ததாவது:

இந்த வரவு – செலவுத் திட்டத்தில் முன்னேற்றமான விடயங்கள் உள்ளன. வடக்கு கிழக்கைப் பொறுத்த வரையில் போரினால் அதிகளவில் பாதிப்புகள் ஏற்பட்டன. மூவின மக்களும் பாதிக்கப் பட்டனர்.

ஏனைய மாகாணங்களுக்கு இணையாக வடக்கு – கிழக்கில் அபி விருத்தி முன்னெடுக்கப்பட வேண்டும். முன்னைய காலங்களில் திட்டங்கள் முன்மொழிவுகளாக மாத்திரமே இருந் தன. வடக்கு   கிழக்கு மாகாணங்களுக் கான ஒதுக்கீடுகளை அதிகரிக்க வேண் டும். இந்த வரவு – செலவுத் திட்டத்தில் ஐந்து தொழில்நுட்பக் கல்லூரிகள் நிறுவ முன்மொழியப்பட்டுள்ளது.

ஐந்து தொழில்நுட்ப பயிற்சிக் கல்லூரியில் ஒன்றை வடக்கு  கிழக்கு மாகாணத் துக்குப் பயனளிக்கும் வகையில் நிர்மாணித்து வழங்க வேண்டும்.

அரச தலைவர் தேர்தலின் போது எமக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்தது.  நல்லாட்சி அரசை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு நாம் பல தியாகங்களைச் செய்தோம். வடக்கு  கிழக்கில் 80 வீதத் துக்கும் அதிகமான வாக்குகளை எமது மக்கள் பெற்றுக்கொடுத்துள்ளனர். வடக்கு  கிழக்கு மாகாணங்களிலுள்ள சிற்றூழியர் பதவிக்கு வெளி மாகாணங் களில் இருந்து நியமனம் வழங்கப்படு கின்றது.

அரச சேவைகளுக்கான தொழில் வழங்குவதிலும் எமக்குப் பாரபட்சம் நடக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் எமக்கு தற்போது மக்களிடம் செல்ல முடியாமல் உள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரலாற் றில் முதல் தடவையாக, 2015ஆம், 2016ஆம் ஆண்டுகளில் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தது. கடந்த வரவு  செலவுத் திட்டத்துக்கு வாக்களிக்க முன்னர் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்திய போது பல கோரிக்கை களை முன்வைத்தோம்.

இதுவரையில் அவற்றில் 5 வீதம் கூட நிறைவேற்றப்பட வில்லை. அது வேதனை அளிக்கின்றது. அதற்கு மாறாகக் கூட்டு அரசு எமக்குக் கல்குடாவில் பியர் தொழிற்சாலை மாத் திரமே கிடைத்தது. வேறு ஒன்றும் எமக்கு கிடைக்கவில்லை  என்றார்.

Leave a comment