வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சிங்கள இனத்துடன் குடும்ப உறவுகளை வைத்துக்கொண்டு வடக்கில் இனவாதத்தை தூண்டுவது ஏற்படையதல்ல என்று மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார்.
அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது:
நாட்டில் அமைதியான சூழ்நிலை நிலவுகின்றது. இந்த அமைதியைச் சீர்குலைக்க சிலர் சூழ்ச்சி செய்கின்றனர். முஸ்லிம், தமிழ் மாணவர்கள் இன்று மும்மொழிகளிலும் தேர்ச்சியடைந்துள்ளனர்.
சரளமாக சிங்கள மொழியினைப் பேசுகின்றனர். இதுவே இனநல்லிணக்கத்தின் வெற்றி. ஆனால் தெற்கில் உள்ள அரசியல்வாதிகள் இன ஒருமைப்பாடு இல்லை என்று குறை கூறுகின்றனர்.
சிங்கள மாணவர்கள் தமது தாய்மொழியினை மட்டுமே கற்க முனைகின்றனர். அவர்களுக்கு தமது மொழியைகூட முறையாகப் கற்க முடியாத நிலையே காணப்படுகின்றது. தெற்கில் உள்ள அரசியல்வாதிகள் தமது பிள்ளைகளுக்கு தமிழ் மொழியை கற்பிக்கின்றார்களா என்பது சந்தேகமே.
கொழும்பில் பிறந்து, கல்வி கற்று சிங்கள மக்களுடன் அரசியல் விடயங்களிலும் ஈடுபட்டவரும் சிங்களவருடன் குடும்ப உறவைக் கொண்டவருமான விக்னேஸ்வரன் வடக்கிற்குச் சென்று இனப்பிரச்சினையை உருவாக்க முற்படுவது முறையற்றது. புலம்பெயர் வாழ் தமிழரது விருப்பங்களை நிறைவேற்றுவதைவிட இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழ் மக்களின் விருப்பங்களையும் நிறைவேற்றுவதைப் பற்றி சிந்திப்பது அவரது பதவிக்கு பொருத்தமாகும் – என்றார்.