ஜெனீவாவுக்கு அளித்த உறுதிமொழியை இலங்கை நிறைவேற்றவில்லை- மனித உரிமைகள் கண்காணிப்பகம்

792 0

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சர்வதேச காலக்கிரம மீளாய்வு அமர்வு நேற்று புதன்கிழமை ஆரம்பமாகியிருக்கும் நிலையில், பேரவையின் உறுப்பு நாடுகள் மறுசீரமைப்புக்கான காலவரையறையுடன் கூடிய  செயற்பாட்டுத் திட்டத்திற்கு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்திருக்கின்றது.

பாரதூரமான உரிமை மீறல்கள் மற்றும் ஏனைய முக்கியமான உறுதிப்பாடுகள்  என்பனவற்றுக்கு பதிலளிக்கும் கடப்பாட்டை உறுதிப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் உட்பட இலங்கையில்  தொடர்ச்சியாக இருந்து வரும் அரசாங்கங்கள் தவறிவிட்டதாக நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்திருக்கின்றது.

சர்வதேச காலக்கிரம மீளாய்வின் பிரகாரம் ஐ.நா. வின் ஒவ்வொரு உறுப்பு நாடுகளும் 4 வருடங்களுக்கு ஒருமுறை மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான பரிசீலனை
மற்றும் இற்றைப்படுத்தல்களை வழங்குகின்றன. மனித உரிமைகள் பேரவையில் ஏனைய நாடுகள் தமது கவலைகளை வெளிப்படுத்தவும் மேம்பாட்டுக்கான பரிந்துரைகளை முன்வைக்கவும் சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.

“2015 அக்டோபரில் நீதியையும் பதிலளிக்கும் கடப்பாட்டையும் பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பையும் உறுதிப்படுத்துவது தொடர்பாக சிறிசேன அரசாங்கம் முக்கியமான உறுதிமொழிகளை வழங்கியிருந்தது’ என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனீவாவுக்கான பணிப்பாளர் ஜோன் பிஷர் கூறியுள்ளார்.

இந்த உறுதிமொழிகளில் அநேகமானவற்றை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தவறியுள்ளமை பாதிக்கப்பட்டோரதும் மற்றும் பாதிக்கப்பட்டிருக்கும் சமூகங்களினதும் நம்பிக்கைகளைச் சிதறடிக்கச் செய்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.

2012 இல் இறுதியாக உலக காலக் கிரம அறிக்கை மீளாய்வு இடம்பெற்றிருந்தது. அச்சமயம் சாதகமான பல நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் எடுத்திருந்தது. மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் ஊடகவியலாளர்களும் தமது கருத்துகளையும் விமர்சனத்தையும் வெளியிட்டு வருவதற்காக கைது செய்யப்படும் அச்சத்தை கொண்டிருக்கவில்லை.

தன்னிச்சையான கைது, குற்றச்சாட்டுகள், சிறுபான்மைத் தமிழருக்கு எதிரான பலவந்தமாக காணாமல் போதல் ஆகியவை குறிப்பிடத்தக்களவில் குறைவடைந்துள்ளன. 2016 மேயில் பலவந்தமாக காணாமல் போதலில் இருந்தும் சகலரையும் பாதுகாப்பதற்கான  சர்வதேச சாசனத்தை இலங்கை அரசாங்கம் அங்கீகரித்திருந்தது. 2015 இல் இருந்து இலங்கை பலதரப்பட்ட ஐ.நா. மற்றும்  சர்வதேச நிபுணர்களை பரிந்துரை வழங்க அழைப்பு விடுத்திருந்தது.

எவ்வாறாயினும், அவசரமான மனித உரிமை விவகாரங்கள்  நிலுவையாக இருந்து வருகின்றன. 2015 பேரவையின் தீர்மானத்தில் இருந்தும் பல விடயங்கள் மேலெழுந்து கொண்டிருக்கின்றன. 2015 பேரவைத் தீர்மானத்தில் 2009 இல் முடிவுக்கு வந்த 3 தசாப்த கால யுத்தத்துடன் தொடர்புபட்ட துஷ்பிரயோகங்களுக்கு தீர்வு காண 4 நிலைமாறு நீதி பொறிமுறைகளை தோற்றுவிப்பது உள்ளீர்க்கப்பட்டிருந்தது.

ஆயினும், அரசாங்கம் காணாமல்போனோர் அலுவலகத்தை மட்டுமே ஸ்தாபித்திருக்கின்றது. 2018 ஆம் ஆண்டுக்கான வரவு  செலவுத் திட்டத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. மீதமாகவிருக்கும் 3 பொறிமுறைகளுக்குமான நிதி ஒதுக்கீட்டையோ அவை பற்றிய குறிப்பீட்டையோ வரவு  செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யவில்லை.

பாதுகாப்புத் தரப்பு மறுசீரமைப்பு, காணிச் சீர்திருத்தம் போன்ற ஏனைய தீர்மானங்களும் அதிகளவிற்கு நிறைவேற்றப்படாமல் தொடர்ந்தும் இருந்து வருகின்றன. குறிப்பாக எதேச்சாதிகாரமான தன்மை கொண்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இன்னமும் அகற்றப்பட்டிருக்கவில்லை. கடந்த  6 மாதங்களாக  தாங்கள் அதனை பலவந்தமாக நடைமுறைப்படுத்தவில்லையென்று அரசாங்கம் உரிமை கோருகின்றது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான சந்தேக நபர்கள் சிறைகளில் தொடர்ந்து இருக்கின்றார்கள். இறுதியில் விடுதலை செய்யப்பட்டவர்களுக்குப பரிகாரம் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. அவை சீர்திருத்தங்களுக்கான வலியுறுத்தல்களையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்கள் உட்பட யாவருக்கும் நீதியையும் கோருகின்றன.

தற்போது உள்ள மீளாய்வின் போது பெண்களின் உரிமை மற்றும் பாதுகாப்புக்கள் தொடர்பாக அரசாங்கங்கள் கவலை எழுப்ப வேண்டும். பாலியல் தன்மை மற்றும் பால் அடையாளத்துவம் தொடர்பான பாதுகாப்புகளுக்கும் பெண்கள் உரிமை தொடர்பான கேள்விகள் எழுப்புவது அவசியமானதாகும். கண்மூடித்தனமான திருமணம் மற்றும் விவாகரத்து வழக்குகளை இலங்கை கொண்டிருக்கின்றது. அதிலும் சிறுபான்மையை பின்னணியாகக் கொண்ட  பெண்களுக்கு நியாயமற்ற முறையில் இச் சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

“ இலங்கை அதன் உரிமைகளை நிலை நிறுத்துவது தொடர்பாக ஆபத்தாக இருப்பது மட்டுமன்றி அத்தியாவசியமான சீர்திருத்தங்கள் தொடர்பாகவும் பின்வாங்கிக் கொண்டிருக்கின்ற‘தென்று பிஷர் கூறியுள்ளார். ஐ.நா. உறுப்பினர்கள் சீர்திருத்தம் தொடர்பான உறுதி மொழிகள் பாதிப்பான விதத்தில் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில் காணப்படுகின்றன.

அத்துடன், தனது உறுதிப்பாடுகளை கௌரவிப்பதற்கான கால அட்டவணையையும் செயற்பாட்டுக்கான திட்டத்தையும் மேற்கொள்ளுமாறு தற்போதைய அரசாங்கத்தை  வலியுறுத்த வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்திருக்கின்றார்.

Leave a comment