டீ.கே.பி. தஸ­நா­யக்­கவை உடன் சிறைச்­சா­லைக்கு மாற்­றவும்-கோட்டை பிர­தான நீதிவான்

284 0

தெஹி­வளை பகு­தியில் வைத்து கடந்த 2008.09.17 அன்று கடத்­தப்­பட்ட ஐந்து மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரின் கடத்தல் மற்றும் காணாமல் ஆக்­கப்­பட்­டமை தொடர்பில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றியல் உத்­த­ரவின் கீழ், கடற்­படை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சைப் பெற்று வரும் கடற்­படையின் முன்னாள் ஊடகப் பேச்­சாளர் கொமாண்டர் டீ.கே.பி. தஸ­நா­யக்­கவை உட­ன­டி­யாக சிறைச்­சா­லைக்கு மாற்­று­மாறு நீதி­மன்றம் நேற்று உத்­த­ரவு பிறப்­பித்­தது.

கோட்டை பிர­தான நீதிவான் லங்கா ஜய­ரத்ன இந்த உத்­த­ரவை நேற்று பிறப்­பித்தார். சிறைச்­சா­லைகள் ஆணை­யா­ள­ருக்கு பிறப்­பித்த குறித்த உத்­த­ரவில், டீ.கே.பி. தஸ­நா­யக்­கவை உட­ன­டி­யாக சிறைச்­சா­லைக்கு மாற்­று­மாறும் அங்கு அவ­ருக்கு சிகிச்சை தேவைப்­படின் சிறைச்­ச­லைகள் கட்­டளைச் சட்­டத்தின் பிர­காரம் சிறைச்சாலை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சை­ய­ளிக்­கலாம் எனவும்  சுட்­டிக்­காட்­டிய நீதிவான், அதற்கு அப்பால் சிகிச்சை தேவைப்­படின் அரச வைத்­தி­ய­சா­லை­களில் சிகிச்­சை­ய­ளிக்க முடியும்  என்றும் குறிப்­பிட்டார்.

ஐந்து மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத் தல் விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போது கடந்த இரு வழக்கு விசா­ரணைத் தினங்­களில் மன்றில் முன்­வைக்­கப்­பட்ட வாதங்­களின் அடிப்­ப­டையில் விசேட உத்­த­ர­வொன்­றினை நீதிவான் லங்கா ஜய­ரத்ன அறி­வித்தார்.

‘ இந்த வழக்கின் 7 ஆவது சந்­தேக நப­ரான கொமாண்டர் டீ.கே.பி. தஸ­நா­யக்க கடற்­படை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சைப் பெறு­வது தொடர்பில் முறைப்­பாட்­டாளர் தரப்­பிலும் பாதிக்­கப்­பட்ட தரப்பின் சார்­பிலும் மன்றில் ஆட்­சே­பம் முன்­வைக்­கப்­பட்­டது. இது தொடர்பில் நான் விட­யங்­களை ஆராய்ந்து அவ­தானம்  செலுத்­தினேன்.  சிறைச்­சாலை வைத்­தி­ய­சா­லையின் பிர­தான வைத்­திய அதி­கா­ரியின் ஆலோ­ச­னைக்கு அமை­வா­கவே தஸ­நா­யக்க தேசிய வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­ட­தா­கவும் அங்­கி­ருந்து விசேட வைத்­திய சிகிச்­சை­க­ளுக்­காக கடற்­படை வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­ட­தா­கவும் சிறைச்­சாலை தரப்பில் கருத்து முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

தஸ­நா­யக்­கவின் உண்­மை­யான நோய் நிலைமை தொடர்பில் நான் சட்ட வைத்­திய அதி­கா­ரியின் அறிக்­கையைக் கோரினேன். சட்ட வைத்­திய அதி­காரி, மேலும் விசேட வைத்­திய நிபு­ணர்கள் சிலரின் அறிக்­கை­களைப் பெற்று இறுதி அறிக்­கையை எனக்கு சமர்ப்­பித்தார். அதில் தஸ­நா­யக்­க­வுக்கு எந்த நோய் நிலை­மை­களும் இல்லை எனவும் அவர் விசா­ர­ணை­க­ளுக்கு முகம்­கொ­டுக்­கலாம் என்றும் கூறப்­பட்­டுள்­ளது.

இந்த விடயம் தொடர்பில் சட்டம் என்ன கூறு­கி­றது என்­பது தொடர்­பிலும் அவ­தானம் செலுத்­தப்­பட்­டது. சிறைச்­சா­லைகள் கட்­டளைச் சட்­டத்தின் 69 (1) ஆம் அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக  கைதி ஒருவர் சிறைச்­சாலை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சைப் பெற முடியும். மாற்­ற­மாக அங்கு உரிய சிகிச்­சைகள் இல்­லா­த­வி­டத்து அரச வைத்­தி­ய­சாலை ஒன்­றி­லேயே சிகிச்சைப் பெற­வேண்டும்.

கடற்­படை வைத்­தி­ய­சாலை அர­சாங்­கத்தின் கீழ் இருந்­தாலும், அது பொது மக்­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளிக்கும் இட­மல்ல.  அது மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டது. எனவே அரச வைத்­தி­ய­சாலை என கூறும் போது அங்கு பொது மக்­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளிக்­கப்­படல் வேண்டும்.

சந்­தேக நபர் கடற்­படை வீரர் என்ற ரீதியில் கடற்­படை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சைப் பெற உரிமை உள்ள போதும், நீதி­மன்­றைப் பொறுத்­த­வரை அவர் சந்­தேக நப­ரே­யாவார். எனவே ஒரு சந்­தேக நபர் தொடர்பில் முன்­னெ­டுக்­க­வேண்­டிய நட­வ­டிக்­கை­க­ளையே நீதி­மன்றம் முன்­னெ­டுக்கும் என்றார்.

Leave a comment