ஒரேயடியாக அனைத்தையும் செய்ய முடியாது- இலங்கை அமைச்சர் ஜெனீவாவில் உரை

266 0

இலங்கை போன்ற ஜனநாயக நாட்டில் மனித உரிமைக்கான நடவடிக்கைகள் அனைத்தையும் ஒரேயடியாக நிறைவேற்றிவிட முடியாதுள்ளது என்பதை சர்வதேசம் புரிந்துகொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷத சில்வா தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் அமர்வின் மூன்றாவது சுற்றில் கலந்துகொண்டு இலங்கை நிலவரம் தொடர்பில் உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

சவால்கள் இல்லாத நாடுகளே இல்லை. எந்தவொரு நாட்டிலும் அந்நாட்டுச் சட்டங்கள் முழுமையாக அமுல் ஆவதில்லை. முழுமையான அர்ப்பணிப்புடன் இயங்கினாலும்கூட, மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதும் அதைப் பாதுகாப்பதும் ஒரே நாளில் நடந்துவிடாது.
மனித உரிமைகளை முழுமையாக அமுல்படுத்துவது குறித்த எமது முயற்சிகள் மீதான சர்வதேசத்தினது விமர்சனங்களை வரவேற்கிறோம். எமது செயற்பாடுகள் குறித்துக் கலந்துரையாடவும் நாம் தயாராக உள்ளோம்.
ஆனால், எமது இந்த முயற்சியை சர்வதேசத் தலையீடுகளின் மூலம் குழப்புவதற்குச் சில சக்திகள் இயங்குவதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். மனித உரிமைகளை முழுமையாக நாட்டில் அமுல்படுத்துவதில் இலங்கை அரசு முழுமனதுடன் உழைக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment