JVP ,UNP கட்சி உறுப்பினர்கள் சிலர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைவு

249 0

மக்கள் விடுதலை முன்னணியின் கண்டி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திமுது அபேகோன் உள்ளிட்ட கண்டி மாநகர சபை மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்துகொண்டனர்.

கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று அவர்களைச் சந்தித்தார்.

ஜனாதிபதி நாட்டுக்காக முன்னெடுத்திருக்கும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவதாக அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.

மத்திய மாகான முதலமைச்சர் திலின பண்டார தென்னகோனுடன் வருகை தந்த இவர்கள், ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவும் இணைந்துகொண்டார்.

Leave a comment