சர்வாதிகாரத்தால் உலகை மிரட்டி பணியவைக்க முடியாது: வடகொரியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

39363 0

சர்வாதிகாரத்தால் உலகை மிரட்டி பணியவைக்க முடியாது என வட கொரியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சர்வாதிகாரத்தால் உலகை மிரட்டி பணியவைக்க முடியாது என வட கொரியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வட கொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்து வருகிறார்.

ஆனாலும் அமெரிக்காவை கண்டுகொள்ளாத வடகொரியா, தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பானை அணு குண்டுகளை வீசி அழித்து விடுவோம் என அதிபர் கிம் ஜோங் உன் மிரட்டல் விடுத்துள்ளார். வடகொரியாவுக்கு சீனாவும் ரஷ்யாவும் மறைமுக ஆதரவு அளித்து வருகின்றன.

இதற்கிடையே வடகொரிய அரசு சார்பில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு சமீபத்தில் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் அமெரிக்கா மீது அணு ஆயுத போர் தொடுக்க தயங்க மாட்டோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போர் சூழல் ஏற்பட்டு விடுமா என அப்பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சர்வாதிகாரத்தால் உலகை மிரட்டி பணிய வைக்க முடியாது என வடகொரியாவுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைக்காட்சி ஒன்றில் கூறுகையில், சர்வாதிகாரத்தால் உலகை மிரட்டி பணிய வைக்க முடியாது. அணு ஆயுதம் தொடர்பாக வட கொரியா விடுத்து வரும் மிரட்டலுக்கு யாரும் அஞ்சப் போவதில்லை. சீனாவுக்கும் வட கொரியா பிரதான எதிரியாக விளங்கப் போகிறது என்பதை சீன அதிபர் ஜி ஜின்பிங் உணரும் வேளை வரும் என தெரிவித்துள்ளார்.

Leave a comment