வலி.வடக்கில் பலாலி உள்ளிட்ட சில பகுதிகள் சுவீகரிப்பது உறுதி -யாழ்.கட்டளைத்தளபதி மகேஸ் சேனநாயக்க-

371 0

blogger-image-1231905895வலி.வடக்கு பலாலி விமான நிலையத்திதை சூழ்ந்த பகுதிகள் உட்பட மேலும் சில இடங்கள் மக்களிடம் கையளிக்கப்படமாட்டாது என்று தெரிவித்துள்ள யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மகேஸ் சேனநாயக்க குறித்த பகுதிகளை நிரந்தரமாக சுவீகரிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.
இச் சுவீகரிப்பிற்கான 3 ஆம் கட்ட மதிப்பீடுகளும் மிக விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் கட்டளைத் தளபதி தகவல் தெரிவித்துள்ளார்.
கீரிமலையில் அமைக்கப்படும் வீட்டுத்திட்டங்களை உரிமையாளர்களுக்கான அடையாளப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு அவர் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:- வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள மேலும் சில காலம் படையினர் நிலை கொண்டிருக்க வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
கடந்த 6 மாதங்களாக மீள்குடியேற்றம் தொடர்பாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருடன் ஏற்படுத்தப்பட்ட கலந்துரையாடல்களினால் சில பகுதிகள் விடுவிக்கப்பட்டு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இருப்பினும் பலாலி விமான நிலையம் உள்ளிட்ட சில பகுதிகளை நாங்கள் விடுவிக்க முடியாத நிலை உள்ளது. அதனை அண்மித்த பகுதிகளும் விடுவிப்பதில் சிக்கல்கள் உள்ளன.
ஜே.233, ஜே234, ஜே.235, ஜே.236, ஜே.250, ஜே.247 போன்ற கிராம சேவகர் பிரிவுகள் இன்னும் சில தினங்களில் விடுவிக்கப்படவுள்ளது. இவ்வாறு விடுவிக்கப்படும் கிராம சேவையாளர் பிரிவுகளில் உள்ள சில இராணுவ முகாங்கள் அகற்றப்படாது.
இராணுவம் வைத்திருக்கும் காணிகள் நிரந்தரமாக சுவீகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சுவீகரிக்கப்படும் காணிகளுக்கான நட்ட ஈடுகடும் மக்களுக்கு வழங்கப்படும் என்றார்.