இராணுவத்தினரை யாழ்ப்பாண கோட்டையில் தங்க வைக்க யோசனை

770 79
யாழ்ப்பாணத்தில் பொதுமக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை யாழ்ப்பாணம் கோட்டையில் தங்க வைப்பதற்கான யோசனை ஒன்றை தாம் பிரேரித்துள்ளதாக வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதற்கான யோசனையை, தாம் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அனுப்பிவைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
யாழ்ப்பாண கோட்டையானது, 1618 ஆம் ஆண்டு போர்த்துகீசர்களால் கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment