ஏ -9 வீதியில் விபத்து : மாணவன் வைத்தியசாலையில்

273 0

வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனைக்கு முன்பாக இன்று மதியம் 2.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவனொருவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து பாடசாலை மாணவனை ஏற்றிக்கொண்டு வவுனியா நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளின் மீது வவுனியாவிலிருந்து கண்டி வீதி நோக்கி பயணித்த கார் தெற்கு வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட சமயத்தில் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவனொருவன் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment