மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

263 0

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 35 இனால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்பொழுது 75 பேர் உள்ள மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழு 110 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

இதேவேளை, நீதிமன்றத்தில் குவிந்திருக்கும் நிதி மோசடி வழக்குகள் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு விசேட 3 மேல் நீதிமன்றங்கள் நிறுவப்படவுள்ளதாகவும் அதன் மூலம் குறித்த வழக்குகள் தொடர்ச்சியாக விசாரணை செய்யப்படவுள்ளதாகவும் நீதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

வழக்கு கோப்புகளை சுயமாக முகாமைத்துவப்படுத்துவதற்கான திட்டமொன்றை நிறுவுவதற்காக புதிய வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் புதிய திட்டத்தின் மூலம் நீதிமன்றங்களில் குவிந்திருக்கும் வழக்குகளை விசாரித்து முடிவுக்கு கொண்டு வர முடியும் எனவும் நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment