மட்டக்களப்பு விமான நிலையத்தில் தேசிய விமான சேவைகள் கட்டுப்பாட்டு மற்றும் விமானம் செலுத்துவது தொடர்பான பயிற்சி பாடசாலை ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இந்த யோசனைகளை முன்வைக்கப்பட்டிருந்ததான.
சிவில் விமான சேவை தொடர்பில் சாதகமான பல விடயங்களை கொண்டுள்ள மட்டக்களப்பு விமான நிலையத்தில் தேசிய விமான சேவைகள் தொடர்பில் அக்கறை கொண்ட தரப்பினரிடத்தில் இருந்து யோசனைகள் கோரப்பட்டு இருந்தன.
அதனடிப்படையில், M/s Skurai Aviation நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை செயற்படுத்துவது தொடர்பிலேயே மேற்படி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.