வித்தியா வழக்கில் விடுவிக்கப்பட்டவருக்கு மீண்டும் விளக்கமறியலில்

250 0

யாழ் – புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில், விடுதலை செய்யப்பட்ட, சந்தேகநபரான பூபாலசிங்கம் இந்திரகுமாரை, பிறிதொரு வழக்கில் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வித்தியா கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரிக்கச் சென்ற வேளை, பொலிஸாரை அச்சுறுத்தியதாக இவருக்கு எதிராக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, பூபாலசிங்கம் இந்திரகுமாரை எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஊர்காவற்துறை நீதவான் ஏ.எச்.எம்.ரியாஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்

Leave a comment