வேலையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் நியமனங்களை வழங்குமாறு வலியுறுத்தி, வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தால், இன்று (15) காலை 9 மணிக்கு, யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக, போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஏற்கெனவே, 143 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகளை, பயிற்சி அடிப்படையில் அபிவிருத்தி உதவியாளர்களாக இவ்வருடத்துக்குள் இணைத்துக்கொள்வதாக வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், இதுவரை எவ்விதமான நியமனங்களையும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறவில்லை என்று கூறியே, நேற்றைய தினம், மீண்டும் போராட்டம் நடத்தப்பட்டது.
இதன்போது, பட்டதாரிகளின் கையெழுத்துகள் உள்ளடங்கிய மகஜர்கள், முதலமைச்சர், ஆளுநர், மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரூடாக பிரதமருக்கு கையளிக்கப்பட்டன.