நேற்று ஆவணி 25 ஆம் திகதி தமிழீழ உதைபந்தாட்டக் குழு அடங்கிய ஏனைய மூன்று நாடுகள் பங்கெடுக்கும் உலக தோழமை கிண்ணம் உதைபந்தாட்டப் போட்டி ஆரம்பமானது. விளையாட்டு திடலில் தமிழீழத் தேசியக் கோடி ஏற்றி அணிவீரர்கள் தேசிய கீத மரியாதையுடன் போட்டி ஆரம்பமானது .
இதில் பரவா அணியும் தமிழீழ அணியும்
போட்டியின் தொடக்கச் சுற்றில் மோதிக் கொண்டனர்.இரு அணிகளுக்கிடையிலும் போட்டி கடுமையாக இருந்த போதிலும் தமிழீழ அணி வீரர்கள் அபாரமாக களமாடி 5-0, ஐந்திற்க்கு சுழியம் என்ற எணிக்கையில் போட்டியை வென்றனர்.
அடுத்த கட்டமாக தமிழீழ அணி வரும் சனிக்கிழமை 27 ஆவணி அன்று சகோஸ் தீவின் அணியுடன் மோதவுள்ளனர். போட்டி சரியாக மாலை 7 மணியளவில் சட்டன் உதைபந்தாட்டத் மைதானத்தில் ஆரம்பமாகும்.
Sutton United FC
Gander Green Lane, Sutton, Surrey, SM1 2EY
அபாரமான முறையில் அவர்கள் திறமைகளை வெளிப்படுத்தியும் சர்வதேச ரீதியில் எமது தமிழீழ அடையாளத்தை கொண்டு செல்லும் செல்ல முயற்ச்சிக்கும் வீரர்களிற்கு தமிழீழ மக்களாகிய எமது ஆதரவென்பது மிகவும் முக்கியமானது. ஆகையால் எதிர் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள போட்டிக்கு அனைவரும் வந்த பங்கெடுத்து வீரர்களை உற்சாகப் படுத்துவீர்கள் என நம்புகின்றோம்.