ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கும் 402 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ். மாநகர சபை பருத்தித்துறை வல்வெட்டித்துறை சாவகச்சேரி என மூன்று நகர சபைகள் மற்றும்இ 13 பிரதேச சபைகளுக்கும் மொத்தம் 402 உறுப்பினர்கள் இம்முறை தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இவர்களில் 243 உறுப்பினர்கள் வட்டார முறையில் நேரடியாக மக்களால் தெரிவு செய்யப்படுவர். ஏனையஇ 159 உறுப்பினர்கள் விகிதாசார முறைப்படி தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
இந்த தேர்தலில்இ வாக்களிப்பதற்கு 468,476 வாக்காளர்கள் யாழ். மாவட்டத்தில் தகுதிபெற்றிருக்கின்றனர் என்றும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.