தனியாரிடமிருந்து மின்சாரம் கொள்வனவு; மின்சார சபைக்கு 8 பில்லியன் நஷ்டம்

307 0

‘வெஸ்ட் கொஸ்ட்’ தனியார் மின்சார உற்பத்தி நிலையத்திடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதால் அரசாங்கத்திற்கு 8 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை திருத்தியமைக்காவிடின் தொடர்ந்து நஷ்டம் அனுபவிக்க நேருமென, ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசூ மாரசிங்க தெரிவித்தார்.

வாய் மூல விடைக்காக கேள்வியொன்றை முன்வைத்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினை மின்சாரம் தொடர்பான மேற்பார்வை குழுவிலும் ஆராயப்பட்டது. இது தொடர்பில் மின்சார சபைக்கு அறிவித்தாலும் அதிகாரிகள் எதுவும் செய்வதாக இல்லை.

மின் கொள்வனவு ஒப்பந்தத்தை மீளமைக்காவிட்டால் தொடர்ந்து நஷ்டம் அனுபவிக்க நேரிடும் என்றார்.

இதற்குப் பதிலளித்த மின்சக்தி புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா: கொள்வனவு ஒப்பந்தத்தை மீள்பரிசீலனை செய்ய உடன்பாடு காணப்பட்டது.இதற்காக குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தம் தொடர்பில் வெஸ்ட் கொஸ்ட் நிறுவனம் முன்வைத்துள்ள புள்ளி விபரங்களை அதே போன்று ஏற்க மின்சார சபை தயாராக இல்லை. அதன் புள்ளிவிபரங்கள் தொடர்பாகவும் தனியான குழு ஆய்வு நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a comment