திடீரென வற்றிப் போன கிணறுகள்!! சுனாமி பீதியால் பதறியடித்து ஓடிய பொதுமக்கள்!! கிழக்கில் பதற்றம்!!

282 0

கிழக்கு மாகாணத்திலுள்ள பல கிணறுகள் திடீரென வற்றிப் போனமையினால் மக்கள் பெரும் பீதியடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுனாமி அனர்த்தம் ஏற்படவுள்ளதாக அஞ்சிய மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டக்களப்பு ஒந்தாச்சிமடம் பகுதியிலும், அம்பாறை மாவட்டம் கல்முனை, பாண்டிருப்பு பகுதியிலும் கிணறுகள் திடீரென வற்றுத் தொடங்கியுள்ளன.இந்தத் தகவல் பரவத் தொடங்கியதும், பல இடங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.எனினும் கிழக்கு மாகாணத்தில் சுனாமி ஆபத்து இல்லை, என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.இது குறித்து மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என நிலையத்தின் மாவட்ட பணிப்பாளர் எம்.றியாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமி பேரழிவு ஏற்படுவதற்கு முன்னரும் திடீரென கிணறுகள் வற்றியுள்ளன. இதன்பின்னர் பாரிய சுனாமி பேரனர்த்தம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment