காஷ்மீர் பற்றிய பேச்சுவார்த்தை

385 0

201608270552448545_Pak-regrets-Indias-rejection-of-discuss-Kashmir-proposal_SECVPFகாஷ்மீர் பற்றிய பேச்சுவார்த்தைக்கான அழைப்பை இந்தியா நிராகரித்ததற்கு பாகிஸ்தான் பிரதம வெளியுறவு ஆலோசகர் வருத்தம் தெரிவித்துள்ளார்.காஷ்மீர் பிரச்சினை பற்றி பேச்சுவார்த்தை நடத்த இம்மாத இறுதியில் இஸ்லாமாபாத்துக்கு வருமாறு இந்திய வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கருக்கு பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் அய்ஜாஸ் அகமது சவுத்ரி கடிதம் எழுதி இருந்தார். அதற்கு ஜெய்சங்கர் எழுதிய பதில் கடிதத்தில், எல்லை தாண்டிய தீவிரவாதம் பற்றி மட்டுமே பேச இந்தியா விரும்புவதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தூதர்களை பாகிஸ்தான் பிரதமரின் வெளியுறவு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் நேற்று சந்தித்து பேசினார்.

அப்போது, காஷ்மீர் பற்றிய பேச்சுவார்த்தை அழைப்பை இந்தியா நிராகரித்ததற்கு வருத்தம் தெரிவித்தார். காஷ்மீரில், கொலைகளும், மனித உரிமை மீறல்களும் நடந்து வருவதாகவும் தூதர்களிடம் அவர் முறையிட்டார்.