அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஆரம்பப் பள்ளி ஒன்றில் புகுந்த ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 5 பேர் பலியாகினர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள தெஹமா கவுன்டி பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப பள்ளியில் துப்பாக்கியைக் கொண்டு ஒருவர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்.
அவர் பள்ளியின் சுவர்கள் மற்றும் ஜன்னல்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இந்தத் தாக்குதலில் அப்பள்ளியிலிருந்த 5 பேர் பலியாகினர். பள்ளி மாணவர்கள் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கெவின் ஜான்சன் நீல் (44) என்பது தெரியவந்துள்ளது. கெவின் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் வில்சன் கவுன்டியில் உள்ள தேவாலயத்தில் விமானப்படை முன்னாள் வீரர் சுட்டதில் 26 பேர் உயிரிழந்தனர். 24 பேர் படுகாயம் அடைந்தனர்.