பாகிஸ்தான் நாட்டில் பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து ஹேர்பின், கண்ணாடி துண்டுகள் உள்ளிட்ட 22 பொருட்கள் சிகிச்சை மூலம் வெளியே அகற்றப்பட்டன.பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 22 வயதுமிக்க இளம் பெண் ஒருவருக்கு நேற்று அறுவை சிகிச்சை ஒன்று நடைபெற்றது. அந்த பெண்மணி கடுமையாக வயிற்று வலி காரணமாக சென்ற வாரம் குர்ராம் பழங்குடியின மாவட்டத்தில் இருந்து சிகிச்சைக்காக வந்திருந்தாள். மேலும் அந்த பெண் மனநலம் குற்றியவளாக இருந்தாள்.
பின்னர் அந்த பெண்ணுக்கு எக்ஸ்-ரே எடுத்து பார்த்ததில் வயிற்றுக்குள் பல்வேறு பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், அந்த பெண்ணின் வயிற்றில் இருந்து ஹேர்பின், பெரிய நகங்கள், கண்ணாடி துண்டுகள் உள்ளிட்ட 20 பொருட்கள் மருத்துவர்களால் நேற்று அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
சுமார் 4 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும், தற்போது அந்த பெண்மணி உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.