சிம்பாபே நாட்டின் அரச ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை, அந்த நாட்டு இராணுவத்தினர் வசப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, குற்றவாளிகளை இலக்கு வைத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இராணுவத்தினர் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளதாக, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
அரசாங்கத்தை இராணுவத்தினர் கைப்பற்றவில்லை எனவும், ஜனாதிபதி ரொபட் முகாபே பாதுகாப்பாக இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், விரைவில் தமது இலக்கை நிறைவேற்றுவதோடு, நிலமையை வழமைக்குக் கொண்டு வர எதிர்பார்த்துள்ளதாகவும், இராணுவத்தினரால் வாசிக்கப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது