2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச பணியாளர்களின் ஊதியம் 15 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அலுவலக உதவியாளரில் தொடக்கம் சட்டமா அதிபர் வரையில் அனைத்து அரச பணியாளர்களுக்கும் இந்த ஊதிய அதிகரிப்பு வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அலுவலக உதவியாளரின் அடிப்படை ஊதியம் 14ஆயிரம் ரூபாயில் இருந்து 23 ஆயிரம் ரூபாவாகவும்இ சட்டமா அதிபரது ஊதியம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாவாகவும்இ விசேட மருத்துவர்களின் அடிப்படை ஊதியம் 60 ஆயிரம் ரூபாயில் இருந்து 69ஆயிரத்து 756 ரூபாவாக அதிகரிக்கப்படும் என தெரிவித்தார்