கடுபொத, கடஹபொல பிரதேசத்தில் கெப் வாகனமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
கெப் வானத்தில் பயணித்த 7 பெண்கள் , மூன்று குழந்தைகள் மற்றும் இரண்டு ஆண்களும் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்தில் சிக்கிய 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடுபொத பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களில் ஒன்பது பேர் மேலதிக சிகிச்சைக்களுக்காக குருணாகலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கெப் வாகனத்தை செலுத்திய சாரதிக்கு வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.