பெல்ஜியம் கால்பந்து அணியின் பயிற்சியாளராக பிரான்ஸ் நாட்டின் முன்னாள் வீரர் தியெரி ஹென்றி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி தியெரி ஹென்றி பெல்ஜியம் கால்பந்து அணியின் துணை பயிற்சியாளராக செயற்படவுள்ளார்.
தியெரி ஹென்றி தமது காற்பந்து அணியில் முக்கியமான மாற்றத்தை கொண்டு வருவார் எனபெல்ஜியம் அணியின் தேசிய பயிற்சியாளர் ரொபர்ட்டோ மார்ட்டினெஸ் நம்பிக்கை வெயிட்டுள்ளார்.
39 வயதாகும் ஹென்றி, 1998ஆம் ஆண்டு பிரான்ஸ் அணி உலகக்கிண்ணத்தை வெல்வதற்கு முக்கியபங்களிப்பை வழங்கியிருந்தார்.
இதேபோன்று 2000ஆம் ஆண்டு நடைபெற்ற யூரோ கிண்ண தொடரிலும் இவர் முக்கிய பங்கினை ஆற்றியிருந்தார்.
அத்துடன் கடந்த 2007ஆம் ஆண்டு பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்களை அடித்த மைக்கேல் பிளாட்டினியின் சாதனையை இவர் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.