வடக்கில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக நோர்வேயும், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஸ்தாபனமும் ஒன்றிணைந்து உதவியளிக்கவுள்ளன.
இதற்கான இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தில் நோர்வையின் உயர்ஸ்தானிகரும், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஸ்தாபனத்தினது இலங்கை பணிப்பாளரும் கைச்சாத்திட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் அண்மையில் குடியேற்றப்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்கும் நோக்கில் இரண்டு தரப்பும் இணைந்து செயற்படவுள்ளன.
மீள்குடியேறியவர்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்கள் இதன்கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன.