சியாம்பலாண்டுவ கல்வி வலயத்திற்கு உட்பட்ட மொனராகலை – பல்லேவலை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் 16 பேர் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த தலைமைத்துவப் பயிற்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்ட மாணவர்களே இவ்வாறு சுகயீனமடைந்துள்ளனர்.
சிரமதானப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை, ஆறு மாணவர்கள் மற்றும் 10 மாணவிகளும் இவ்வாறு சுகயீனமடைந்துள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் கொவிதுபுர பொலிஸாரால் சியாம்பலாண்டுவ பொதுச் சுகாதார பரிசோதகருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்பின்னர் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவர்கள், மீண்டும் குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக, அப் பாடசாலையின் அதிபர் கூறியுள்ளார்.