முஸ்லிம் பாடசாலையில் மோதல்: ஐவர் கைது, மூவர் காயம்!

256 0

ஹெம்மாதகம பகுதியிலுள்ள பிரபல முஸ்லிம் பாடசாலை ஒன்றின் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. 

நேற்று இடம்பெற்ற இந்த மோதல் தொடர்பில் ஐந்து மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இதில் காயமடைந்த மூன்று மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுஇவ்வாறு இருக்க, கைதுசெய்யப்பட்ட ஐந்து மாணவர்களையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a comment