அமெரிக்கா: 6 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு பயணத்தடை விதித்து கலிபோர்னியா கோர்ட்டு உத்தரவு

258 0

அமெரிக்காவிற்குள் ஆறு முஸ்லீம் நாடுகளை சேர்ந்த பயணிகள் நுழைய கலிபோர்னியா நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்று ஒரு வாரத்திற்குள் சில முஸ்லீம் நாடுகள் மற்றும் அமெரிக்காவிற்கு எதிரான நாட்டினர் அமெரிக்காவில் நுழையக்கூடாது என பரபரப்பு உத்தரவை பிறப்பித்தார். ஆனால் இந்த உத்தரவுக்கு கடும் கண்டனம் எழுந்தது. டிரப்பின் இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. அதன் முடிவில் டிரப்பின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

மீண்டும் கடந்த அக்டோபர் 19-ம் தேதி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய 6 முஸ்லிம் நாடுகளை சேர்ந்த பயணிகளும், வெனிசுலாவை சேர்ந்த குறிப்பிட்ட சில அதிகாரிகளும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் நுழைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தடை விதித்தார். பிற நாட்டு பயணிகள் அமெரிக்காவில் நுழைவதற்கு தடை விதிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று கூறி ஹவாய் மாகாண அரசு உள்ளூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டிரம்பின் இந்த கட்டுப்பாடுகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து அரசு சார்பில் கலிபோர்னியா உள்ளூர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அமெரிக்காவுடன் தொடர்பில் இல்லாத ஆறு நாடுகளை சேர்ந்த பயணிகள் அமெரிக்காவில் நுழைய தடை விதித்து உத்தரவிட்டனர்.

நீதிபதிகளின் உத்தரவின்படி ஈரான், சிரியா, லிபியா, ஏமன், சோமாலியா, சாத் ஆகிய ஆறு முஸ்லீம் நாடுகளை சேர்ந்த பயணிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிப்பட்டுள்ளது. இருப்பினும் தடைவிதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களின் ரத்தசொந்தங்கள் அமெரிக்காவில் இருந்தால் அவர்களுக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக டிரம்பின் வெளியிட்ட பயணத்தடை பட்டியலில் இடம்பெற்றிருந்த வடகொரியா மற்றும் வெணிசுலா பயணிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment