மைத்திரி அரசின் ஆட்சியிலும் தமிழர்கள் மீதான சித்திரவதைகள் தொடர்வதாக சமீபத்தில் சர்வதேச ஊடகம் ஒன்று ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தது.வெளிநாடுகளில் புகலிடம் கோரியுள்ள இலங்கை தமிழர்களிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் மற்றும் மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில் அந்த செய்தி வெளியிடப்பட்டிருந்தது.வெளியான செய்தியைத் தொடர்ந்து, இச்சம்பவங்கள் குறித்த விசாரணைகள் நடத்தப்படும் என வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், இலங்கையில் சித்திரவதைக்கு உள்ளான தமிழ் இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள வடுக்களையும், காயங்களையும் ஏபி செய்தி நிறுவனம் தற்போது புகைப்படங்களாக வெளியிட்டுள்ளது.இதேவேளை, இலங்கையில் சித்திரவதைகளுக்கு உள்ளான தமிழ் இளைஞர்கள் வழங்கிய வாக்கு மூலம் அடங்கிய காணொளி ஒன்றை ஏபி செய்தி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.