சிரியாவில் மோதல் தவிர்ப்பை மேற்கொள்ள எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவக்கைகள் தொடர்பில் ரஷ்யாவுடன் தெளிவு ஒன்று ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இதனை தெரிவித்துள்ளார்.
ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சர்ஜீ லெவரோப்வுடன் ஜெனிவாவில் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து ஜோன் கெரி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் சிறிய விடயங்கள் பல தீர்த்துகொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனிவாவில் இந்த பேச்சு வார்த்தை இடம்பெற்ற வேளையில், சிரியாவின் தரய்யா நகரத்தில் இருந்து கிளர்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.
4 வருடங்களுக்கு முன்னர் சிரிய அரசாங்க படைகளினால் சுற்றிவளைக்கப்பட்டிருந்த இந்த நகரத்தில் இருந்து சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மக்களை மீட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.