விபத்தில் பலியான 14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் உதவி

387 0

201608271236220933_jayalalithaa-order-for-dead-14-person-family-each-Rs-1_SECVPFபல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் உதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நாகப்பட்டினம் மாவட்டம் கோபாலசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், தருமபுரி மாவட்டம், குடுமியாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விஷால், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகரம், காந்தி நகரைச் சேர்ந்த யோகேஸ்வரன்.

திருவள்ளூர் மாவட்டம், நாரவாரிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராகுல், பிரேம்நாத், விழுப்புரம் மாவட்டம், வி.சித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம், நாகப்பட்டினம் மாவட்டம், அகர எலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜானகி.

விருதுநகர் மாவட்டம், சின்ன சுரைக்காய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் முருகன், ஜெய பிரகாஷ், ராஜபாளையம் நகரைச் சேர்ந்த ஜோதிவேல்.

கடலூர் மாவட்டம், பெரியாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தனுஷ், சிவகங்கை மாவட்டம், தமறாக்கி தெற்கு கிராமத்தைச் சேர்ந்த சேதுமாதவன், திருச்சிராப்பள்ளி மாவட்டம், அலகரை மேற்கு கிராமத்தைச் சேர்ந்த கமலநாதன், மதுரை மாவட்டம் வடிவேல்கரை கிராமத்தைச் சேர்ந்த சின்ன காளை ஆகியோர் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த இந்த 14 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.