தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று தஞ்சாவூரில் கூறியது:
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதிக்குச் செல்லாததால், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழக அரசு செயலற்ற நிலையில் உள்ளது. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதும் ஊழல் இருந்தது. அப்போதே, மத்திய அரசு சோதனை நடத்திஇருந்தால் ஏராளமான ஆவணங்களை கைப்பற்றியிருக்கலாம். அவர், இறந்த பிறகு அதிமுகவில் விரிசல் ஏற்படும் முன்பே சோதனை நடத்தியிருந்தாலும் ஆவணங்கள் சிக்கி இருக்கும்.
வருமான வரி சோதனை ஒருதலைப்பட்சமாக நடப்பதாக மக்கள் கூறுகின்றனர். சேகர் ரெட்டி உள்ளிட்டோரிடம் நடத்தப்பட்ட சோதனைகளின் முடிவு மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை பிரதமர் அலுவலகம் வரை நடத்த வேண்டும் என்றார்.