காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் மழைக்கால பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றது.
தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இந்த ஆய்வு கூட்டம் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதன்மை செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் கே,சத்யகோபால். மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, மாவட்ட வருவாய் அலுவலர் அ.நூர் முகமது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் வை,ஜெயகுமார், சார் ஆட்சியர்கள் செங்கல்பட்டு வீ.ப.ஜெயசீலன், மதுராந்தகம் கிள்ளி சந்திரசேகர், வருவாய் கோட்ட அலுவலர்கள் காஞ்சிபுரம் ராஜீ, தாம்பரம் சந்திரசேகர், பொதுப்பணி துறை செயற்பொறியாளர் முத்தையா, மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மனோகரன் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
தாழ்வான பகுதிகளில் நீர் தேங்குகின்றபோது உடனடியாக வெளியேற்றுவதற்கும், ஆக்கிரமிப்புகள் அகற்றுவது தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.