மக்கள் பிரதிநிதிகளால் மக்கள் ஏமாற்றப்படும் போதோ அவா்கள் அரசியலை வெறுக்கின்றனா்-சந்திகுமாா்

562 0

மக்கள் தாங்கள் தெரிவு    செய்யும் பிரதிநிதிகளால் ஏமாற்றப்படும் போதே அவா்கள் அரசியலை வெறுக்கின்றனர்.  ஒருவரை தங்களின்  பிரதிநிதியாக மக்கள் தெரிவு செய்யும் போது அந்த பிரதிநிதியிடம் இருந்து  உச்சபட்ச சேவையை எதிர்பார்ப்பார்கள்  ஆனால் அது இடம்பெறாது போகும் போதே மக்களுக்கு அரசியலில் வெறுப்பு ஏற்படுகிறது. என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான முருகேசு சந்திரகுமாா் தெரிவித்துள்ளாா்.

 கிளிநொச்சி இரத்தினபுரம் கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்விலேயே அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா். அங்கு அவா் மேலும் தெரிவிக்கையில்

எங்களுடை தமிழ் அரசியல் தளத்தில் பொறுப்புக் கூறுதல்  என்பது இல்லாததன் காரணமாகவே  மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற  பிரதிநிதிகள்  மக்களை இலகுவில் ஏமாற்றிவிட்டுச் செல்கின்றனா்.  ஒரு மக்கள் பிரதிநிதிக்கு இருக்க கூடிய கடகளும்  பொறுப்புக்களும்  அதிகம். வெறுமனே அறிக்கைகளுக்காகவும், பாராளுமன்றத்திலும், மாகாண சபையிலும்  உரையாற்றுவது  மட்டுமல்ல அவா்களது  பணிகள் எனத் தெரிவித்த சந்திரகுமாா்
 தமிழ் மக்களை   பொறுத்தவரை அவா்களின்  அடிப்படைப் பிரச்சினைகள் முதல் அரசியல் உரிமை வரை  தீர்க்கப்பட வேண்டும். ஆனால் வெறுமனே அரசியல் உரிமைகளை மட்டும் பேசிக்கொண்டிருக்க முடியாது  ஒரு புறம்  அரசியலுரிமை பற்றி பேசுகின்ற  அதே வேளை மறுபுறம் மக்களின் அடிப்படை பிரச்சினைகள்  தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.  தொழில்வாய்ப்பு, உட்கட்டுமானம், வாழ்வாதாரம் உள்ளிட்ட  மக்களின் அடிப்படை விடயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க  வேண்டும்.  தமிழ் மக்கள் இன்று  தங்களின் அடிப்படைப் பிரச்சினைகளில் அதிகம் பலவீனமடைந்துள்ளனா். இது ஒரு ஆரோக்கியமான சமூகத்திற்கு ஏற்ற சூழல் இல்லை.
 கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை யுத்தத்திற்கு பின்னர் நாங்கள்  மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தோம், அதனாலேயே இன்று ஓரளவுக்கேனும் மக்கள் நிம்மதி  பெரு மூச்சு விடுகின்றனா். கனிசமான இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியிருகின்றோம்,  எனத் தொிவித்த  அவா் இவ்வாறு செயல்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுத்து செல்கின்ற போதே எங்கள் சமூகம் ஒரு நிறைவான நிலையை அடையும் ஆனால் தற்போது இதில் இடைவெளி ஏற்பட்டுவிட்டது எனக் குறிப்பிட்ட அவா்
 மக்கள்  தங்களின் அரசியல் தெரிவுகளின் போது நிதானமாக சிந்தித்து மக்களுக்கான மக்கள்  பிரதிநிதிகளை தெரிவு  செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாா்
 இரத்தினபுரம்  கிராமத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பெருமளவான பொது மக்களும் கலந்துகொண்டனர்.

Leave a comment