உள்ளுராட்சி சபை தேர்தல் எதிர்வரும் ஜனவரி 25 ஆம் 31 ஆம் திகதிக்கு இடையிலுள்ள ஒரு தினத்தில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி சபைகளுக்கான உறுப்பினர்கள் எண்ணிக்கை தொடர்பில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று (13) தன்னுடைய கைக்கு கிடைக்கவுள்ளதாகவும், அவ்வாறு கிடைக்கப் பெற்றதன் பின்னர் 80 நாட்களுக்குள் தேர்தல் நடாத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எனது கையில் “பிளே” என்று விளையாட்டு ஆரம்பித்து வைப்பது மாத்திரமே எஞ்சியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.