பேரூந்தில் கடத்திச் செல்லப்பட்ட பெருந்தொகை கஞ்சா வவுனியா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட பேரூந்தில் கடத்திச் செல்லப்பட்ட, 93 கிலோ 278 கிராம் நிறையுடைய கஞ்சா வவுனியா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கனகராயன்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் வெல்கமவின் வழிநடத்தலில் கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த பிந்து தலைமையிலான குழுவினர் பேரூந்தை வழிமறித்து சோதனை நடத்தியபோது, மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை மீட்டுள்ளனர்.
இச் சோதனை நடவடிக்கையின் போது பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துனர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்ட இருவரையும் வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.