கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சியில் நாட்டப்பட்ட மற்றும் விதைக்கப்பட்ட மாவீரர் கல்லறைகள் அமைந்துள்ள இடத்தை பெற்றோர்களும், பொது அமைப்புக்களும் நினைவு கூருவதற்கு ஏற்ப சிரமதானப் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
கிராம மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லத்தைத் துப்புரவு செய்யும் பணிகளில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.