இறைச்சிக்காக விலங்குகளை கொல்லும் இடமொன்றினை நடாத்துவதாக வழக்கு தாக்கல்

315 0
கிண்ணியா பிரதேச சபை  சூழல் பாதுகாப்பு உரிமமின்றி இறைச்சிக்காக விலங்குகளை கொல்லும் இடமொன்றினை நடாத்துவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல்  செய்துள்ளது.
கிண்ணியா-முனைச்சேனை பகுதியில் பிரதேச சபைக்கு சொந்தமான கால்நடைகளை இறைச்சிக்காக கொல்லும் இடம்மொன்று உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய சுற்றாடல் அதிகார சபையைச் சேர்ந்த உத்தியோகத்தர்களால் பல தடவைகள் கள விஜயங்கள் மேற்கொள்ளப்பட்டு, குறித்த பகுதி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, இந்த மாடு வெட்டும்  இடம் சுற்றாடலுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக இனம் காணப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுற்றாடல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கிண்ணியா பிரதேச சபைக்கு சுற்றாடல் அதிகார சபையினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
எனினும், இது குறித்து கிண்ணியா பிரதேச சபை கவனம் செலுத்தாத நிலையில கிண்ணியா பிரதேச சபை மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a comment