இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 1 லட்சத்து 67 ஆயிரம் பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குடம்பிகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
தற்போதைய காலப்பகுதியில் நிலவும் மழையுடனான காலநிலையுடன் யாழ்ப்பாணம், கண்டி, கொழும்பு, கம்பஹ, இரத்தினபுரி, புத்தளம் மற்றும் குருணாகல் மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் நாஜித் சுமனசேன தெரிவித்துள்ளார்.