சயிட்டம் நிறுவனம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி விரைவில் உயர்நீதிமன்றத்தில் தெரியப்படுத்த வேண்டும் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக, அச் சங்கத்தின் உதவிச் செயலாளர் நலின் டி சில்வா தெரிவித்துள்ளார்.
சயிட்டம் நிறுவனத்தை இரத்துச் செய்வதாக, அரசாங்கம் வாக்களித்துள்ள நிலையில், அதனை உயர்நீதிமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும் என, அவர் மேலும் கூறியுள்ளார்.
இதுஇவ்வாறு இருக்க, எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் மாலபே நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை மற்றும் முல்லேரியா வைத்தியசாலையை இணைத்து போதனா வைத்தியசாலையாக மாற்ற எதிர்பார்த்துள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.