அமெரிக்கக் கடற்படையின் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான பணிப்பாளர் கப்டன் பிராங்க் லிங்கோயஸ் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டு பாதுகாப்புத் தரப்புகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
நேற்று முன்தினம் இலங்கைக் கடற்படைத் தலைமையகத்துக்குச் வந்த கப்டன் பிராங்க் லிங்கோயஸ் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க மற்றும் உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார்.
இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கை – அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கள் பலமடைந்துள்ள சூழலில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புக்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே அமெரிக்கக் கடற்படையின் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான பணிப்பாளர் கப்டன் பிராங்க் லிங்கோயஸ் இலங்கை வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.