உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சு.க.மூன்றாமிடத்திற்கு தள்ளப்படும் – ஜி.எல்.பீரிஸ்

311 0

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பொரளை என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் உளளூராட்சி மன்றத் தேர்தலில் உத்தியோகபூர்வமாக போட்டியிடும் சுதந்திரக்கட்சி படுதோல்வியடையும்.சுதந்திரக் கட்சி மூன்றாம் நிலைக்கு தள்ளப்படும் என்பதனை ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் நன்கு அறிவார்கள்.

சுதந்திரக் கட்சி இம்முறை ஜே.வி.பியுடனே மோதும். சுதந்திரக் கட்சி தற்பொழுது ஐக்கிய தேசியக் கட்சியின் ஓர் வலைப் போன்று செயற்படுகின்றது. கூட்டு எதிர்க்கட்சியை மீளவும் ஏமாற்றிவிட முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

Leave a comment